தக்கலையில் அயோத்தி சாமியார் உருவப்படத்தை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
தக்கலையில் அயோத்தி சாமியார் உருவப்படத்தை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தக்கலை,
தக்கலையில் அயோத்தி சாமியார் உருவப்படத்தை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வினர் போராட்டம்
சனாதனம் குறித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்த அயோத்தி சாமியார் பரம ஹன்ச ஆச்சாரியாவை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று காலை தக்கலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் மரிய சிசுகுமார் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வீரவர்கீஸ், நகர செயலாளர் சுபிகான், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ், ஜெப ஜாண், சவுந்தர்ராஜ், உதயநிதி ரசிகர்மன்ற பொருளாளர் ஜூடு சேம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது சாமியாருக்கு எதிரான கண்டன கோஷமிட்டு அவரது உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். பின்னர் அங்கிருந்து தக்கலை போலீஸ் நிலையம் சென்று சாமியார் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.