21 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


21 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x

21 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

சேலம்

ஆத்தூர்:

21 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

தேர்தல்

ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.ைவ சேர்ந்த லிங்கம்மாள் பழனிசாமி இருந்து வந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை சேலம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவா கிருஷ்ணராஜ் நடத்தினார்.

தேர்தலில் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 14 கவுன்சிலர்களில் 11 பேர் கலந்துகொண்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட டாக்டர் பத்மினி பிரியதர்சினி மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதைத்தொடர்ந்து டாக்டர் பத்மினி பிரியதர்சினி ஒன்றியக்குழு தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

21 ஆண்டுகளுக்கு பிறகு...

தொடர்ந்து அவர் ஒன்றியக்குழு தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், பொன். கவுதம சிகாமணி எம்.பி., ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செழியன், ஒன்றிய பொருளாளர் பைத்தூர் ரவி, நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், நரசிங்கபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் காட்டு ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த புனிதவதி ஒன்றியக்குழு தலைவராக இருந்தார். அதன் பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களே ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவராக இருந்துள்ளனர். அதன் பிறகு தற்போது தான், அதாவது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story