தி.மு.க. கொடியேற்று விழா
தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி மருதாவூர் கிராமத்தில், தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கி கட்சிகொடியை ஏற்றி வைத்தார். திருமருகல் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம், முன்னாள் ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை நகரசபை தலைவர் மாரிமுத்து, திட்டச்சேரி நகர செயலாளர் முகமது சுல்தான், மாவட்ட பிரதிநிதி குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story