தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் சந்தை அருகில் தி.மு.க. சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பாளையங்கோட்டை யூனியன் தலைவரும், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் பாரி, பொன்னேரி சிவா ஆகியோர் பேசினர். நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், ஒன்றிய செயலாளர்கள் வேலன்குளம் முருகன், ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய கவுன்சிலர் செல்வசங்கர், நகர செயலாளர்கள் ஏர்வாடி அயூப்கான், களக்காடு மணிசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story