தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசூரில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் அரசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கலியவர்தன், பொருளாளர் மைக்கேல், துணை செயலாளர் வீராசாமி, மாவட்ட பிரதிநிதி ராஜேஷ்கண்ணா, துணை செயலாளர்கள் பிரபாவதி தாமோதரன், சின்னப்பராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அரசூர் கிளை செயலாளர் குமார், அய்யப்பன் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி மாவட்ட அவைத்தலைவர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை கூறினர்.

கூட்டத்தில் வருகிற 19-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அரசு விழா மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கவும், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தொழில்நுட்ப பிரிவு அணி ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டராமன், ஒன்றிய கவுன்சிலர் ராஜீவிபழனிவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர் ரவி பிரபாகரன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஸ்ரீதர், கிளைக் கழக செயலாளர் மணிமாறன், மாவட்ட ஒன்றிய சார்பு அணிகள், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில மக்கள் நல துணை தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story