திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வு - ராமதாஸ் வாழ்த்து


திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் மீண்டும் தேர்வு - ராமதாஸ் வாழ்த்து
x

திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர். ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

15-வது திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்ந நிலையில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு டாக்டர். ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுகவின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். தந்தையைப் போல கட்சியை சிறப்பாக வழிநடத்திச் செல்லவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story