தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க சார்பில், கருணாநிதி 99-வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பேச்சாளர் நெல்லை மணி, அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நகர அவைத்தலைவர் ஷாஜகான், நகர செயலாளர்கள் கோபாலசமுத்திரம் வானுமாமலை, மேலச்செவல் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், வழக்கறிஞர் அணி செல்வகுமார், பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன், துணைத்தலைவர் மாரி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன், துணைத் தலைவர் டேவிட் ஸ்டீபன், கூனியூர் பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மேகநாதன், முன்னாள் நகர செயலாளர்கள் சுடலையாண்டி, அபூபக்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரேமானந்த் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.