தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

கரிவலம்வந்தநல்லூரில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர்‌ வடக்கு ரத வீதியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மதிமாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய பிரதிநிதிகள் மாரியம்மாள், ஈஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கரிவலம்வந்தநல்லூர் நகர செயலாளர் தேவா என்ற தேவராஜ் வரவேற்று பேசினார்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். ஒன்றிய செயலாளர்கள் சங்கரன்கோவில் தெற்கு லாலாசங்கரபாண்டியன், வாசுதேவநல்லூர் வடக்கு பொன்முத்தையா பாண்டியன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், கடையநல்லூர் நகராட்சி தலைவர் ஹபீப் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story