கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது - ஓ.பன்னீர் செல்வம்


கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது - ஓ.பன்னீர் செல்வம்
x
தினத்தந்தி 14 May 2023 3:37 PM IST (Updated: 14 May 2023 3:38 PM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம் , போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறி விட்டதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் , போதை பொருட்களை கட்டுப்படுத்த தவறி விட்டதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் கள்ளச்சாராய கலாச்சாரம் , போதை பொருட்கள் நடமாட்டம் , பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை அடியோடு அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story