துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி


துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி
x

விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சுப்புலட்சுமி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவருக்கான தேர்தல் கடந்த 2 முறை அறிவிக்கப்பட்டு, கவுன்சிலர்கள் வராததால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வ.புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளராக 3-வது வார்டு கவுன்சிலர் சுதா போட்டியிட்டு, 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சுதாவிற்கு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி, செயல் அலுவலர் சிவஅருணாச்சலம் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.


Next Story