த.மு.மு.க. சார்பில் இப்தார் விருந்து


த.மு.மு.க. சார்பில் இப்தார் விருந்து
x

குளச்சலில் த.மு.மு.க. சார்பில் இப்தார் விருந்து

கன்னியாகுமரி

குளச்சல்,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் குளச்சல் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் இப்தார் விருந்து பி.எஸ்.புரம் முஹைதீன் பள்ளி தெரு சுலைமான் இல்லத்தில் நடந்தது. இதற்கு த.மு.மு.க. மற்றும் ம.ம.க. நகர தலைவர் பைரோஸ் காஜா தலைமை தாங்கினார். ம.ம.க. நகர செயலாளர் அபுதாய்ரு, எஸ்.எம்.ஐ. நகர செயலாளர் முஹம்மத் ஆதில், த.மு.மு.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மத் பஷீர், எஸ்.எம்.ஐ.மாவட்ட பொருளாளர் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிஜாம் உஸ்தாத் தொடங்கி வைத்தார். மாவட்ட த.மு.மு.க. முன்னாள் செயலாளர் முகம்மது சபீக் வரவேற்றார். விழி நெல்லை மண்டல செயலாளர் ரியாஸ் ஹமீத் சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட த.மு.மு.க. தலைவர் சுல்பிக்கர், த.மு.மு.க செயலாளர் சுலைமான், ம.ம.க. மாவட்ட பொருளாளர் அபூபக்கர் சித்திக், நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் ரஹீம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நஷீம், தி.மு.க. நகர பொருளாளர் நூர், மாவட்ட காங்.துணைத்தலைவர் முனாப், முஸ்லிம் லீக் நகர தலைவர் இஸ்மாயில், ஒய்.எம்.ஜெ.நகர தலைவர் பாரூக், சமூக ஆர்வலர்கள் சபீர், சமீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

ஐ.பி.பி.நகர செயலாளர் ஹாஜா மைதீன் நன்றி கூறினார். இதில் ஜமாத்தார்கள், தோழமை கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story