பாப்பிரெட்டிப்பட்டி அருகேபோலி டாக்டர் கைதுமருந்து, மாத்திரைகள் பறிமுதல்


பாப்பிரெட்டிப்பட்டி அருகேபோலி டாக்டர் கைதுமருந்து, மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2023 7:00 PM GMT (Updated: 17 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிரடி சோதனை

தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் போலி டாக்டர்கள் உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுகாதார துறையினருக்கு புகார்கள் சென்றன. இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஊசி போட்டு, மாத்திரை கொடுப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தர்மபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சாந்தி மற்றும் போலி மருத்துவர் தடுப்பாய்வு குழுவினர் நேற்று அந்த வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் மகள் தேவி (வயது 45) முறையாக எம்.பி.பி.எஸ். படிக்காமல் பல ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

கைது

இதனை தொடர்ந்து போலி டாக்டர் தேவியின் வீட்டில் இருந்து மருந்து, மாத்திரைகள், ஸ்டெதஸ்கோப், நெபுலேசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுகுறித்து பாப்பிரெட்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ அலுவலர் அருண் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்த தேவியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story