சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப டாக்டர்கள் சேவையாற்ற வேண்டும்


சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப டாக்டர்கள் சேவையாற்ற வேண்டும்
x

சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப டாக்டர்கள் சிறப்பான சேவையாற்ற வேண்டுமென கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

விருதுநகர்


சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப டாக்டர்கள் சிறப்பான சேவையாற்ற வேண்டுமென கலெக்டர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

தொடக்க நிகழ்ச்சி

விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு மூலம் நடைபெற்ற டாக்டர்களுக்கான தொடர் மருத்துவக்கல்வி நிகழ்ச்சிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- சாலை விபத்து மற்றும் பிற காயங்கள் உள்ளிட்ட அவசர நோய்கள் மூலம் ஏற்படும் இறப்புகளை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சாலை விபத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு 8-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 முதல் 550 ேபர் வரை சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது. பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படும்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது.

சிறப்பான சேவை

ஏழை, எளிய மக்கள் தான் அதிகமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற வருபவர்களின் உயிர் என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலமாகும்.

எனவே டாக்டர்கள் தங்களின் விரைவான செயல்பாடுகள் மூலம் சரியான சிகிச்சை அளித்து உயிர் இழப்பை தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தன்னம்பிக்கையுடனும், சிறப்பாகவும் செயல்படும் நிலையில் தொடர்ச்சியாக மருத்துவ கல்வியை அளிப்பது அவசியமாகும். டாக்டரிடம் சென்றால் எப்படியாவது காப்பாற்ற பட்டு விடுவோம் என்ற சாதாரண குடிமகன் கண்ணோட்டத்தின் அடிப்படையில் டாக்டர்கள் சிறப்பான சேவையாற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சையளிப்பது குறித்து பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, மருத்துவ கல்லூரி விபத்து பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கோகுல்நாத் பிரேம்சந்த், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story