அரசு பள்ளியின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு நன்கொடை


அரசு பள்ளியின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு நன்கொடை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:00+05:30)

சூளகிரி அருகே புரவலர் திட்டம் மூலம் அரசு பள்ளியின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு நன்கொடையை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி ஒன்றியம், சின்னாரன்தொட்டி ஊராட்சிக்குட்பட்ட குடிசாதனபள்ளி கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.5½ லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சத்துணவு கூடம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் பள்ளியில் வளர்ச்சி மேம்பாட்டிற்காக, புரவலர் திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் கட்சியினர், பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக ரூ.52 ஆயிரம் பெறப்பட்டது. அந்த தொகையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், கே.பி.முனுசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு என்ற வெங்கடாச்சலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story