போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:30 AM IST (Updated: 11 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்


பழனி கோட்ட கலால் துறை சார்பில், போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழனி பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோட்ட கலால் அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கினார். பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மது, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்பு மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பேசினர்.

தொடர்ந்து சிவகங்கையை சேர்ந்த கலைக்குழுவினர் கரகாட்டம், கலிலாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் நாட்டுபுற பாடல் போன்ற கலைநிகழ்ச்சி மூலம் போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து விழிப்புணர்வு நோட்டீசையும் பயணிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பயணிகள், பொதுமக்கள் பார்த்தனர்.



Next Story