முட்டை விற்பனையில் 'மைனஸ்' விலையை நீக்க வேண்டும்-பண்ணையாளர்கள் கோரிக்கை


முட்டை விற்பனையில் மைனஸ் விலையை நீக்க வேண்டும்-பண்ணையாளர்கள் கோரிக்கை
x

முட்டை விற்பனையில் ‘மைனஸ்’ விலையை நீக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வாரத்தில் 3 நாட்கள் கூடி நிர்ணயம் செய்கிறது. மேலும் பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் விலையை குறைத்து வாங்குவதை தடுக்க சமீபத்தில் நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனை குழு தொடங்கப்பட்டது.

இந்த குழு தினமும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து எவ்வளவு குறைத்து விற்பனை செய்யலாம் என்பதை அறிவிக்கும். அந்த வகையில் இந்த குழு நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 30 காசுகள் குறைத்து விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியது.

இவ்வாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 30 காசுகள் குறைத்து விற்பனை செய்வதால், தினமும் சுமார் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே முட்டை விற்பனையில் 'மைனஸ்' விலையை நீக்க வேண்டும் என பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story