நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 6:59 AM GMT)

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக உயர்ந்து உள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.139-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.141 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story