கணவர் இறந்த 2 மணி நேரத்தில் உயிரைவிட்ட மனைவிசூளகிரி அருகே நெகிழ்ச்சி சம்பவம்


கணவர் இறந்த 2 மணி நேரத்தில் உயிரைவிட்ட மனைவிசூளகிரி அருகே நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 4 Oct 2023 1:00 AM IST (Updated: 4 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே கணவர் இறந்த 2 மணி நேரத்தில் மனைவி உயிரைவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே கணவர் இறந்த 2 மணி நேரத்தில் மனைவி உயிரைவிட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தம்பதிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உல்லட்டி ஊராட்சிக்குட்பட்ட மணியங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பெரிய சாக்கப்பன் (வயது 90). விவசாயி. இவருடைய மனைவி எலசம்மா என்ற குன்னனியம்மா (85). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 பேர குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பெரிய சாக்கப்பன் வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று காலை 11 மணியளவில் இறந்தார். பின்னர் மகன் மற்றும் குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்வதற்கான இறுதிசடங்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

நெகிழ்ச்சி

கணவரின் இறப்பை தாங்க முடியாமல் குன்னனியம்மா துக்கத்துடன் கதறி அழுதவாறு சோகத்தில் காணப்பட்டார். குடும்பத்தினர் அவரை தேற்றியும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதையடுத்து மதியம் 1 மணி அளவில் அதாவது கணவர் இறந்த 2 மணி நேரத்தில் குன்னனியம்மாவும் இறந்தார். தாய், தந்தை அடுத்தடுத்து இறந்ததால் அவர்களுடைய உடல்களை பார்த்து மகன் மற்றும் குடும்பத்தினர் அழுதனர்.

பின்னர் கணவர், மனைவி 2 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய இறுதிசடங்கு பணிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். கணவர் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் அவர் இறந்த 2 மணி நேரத்தில் மனைவியும் உயிரை துறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story