அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு


அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
x

அந்தியூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையையொட்டிய வனப்பகுதியில் யானை, மான், புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகின்றன. இதனால் யானைகள் போன்ற விலங்குகள் தண்ணீர், உணவு தேடி அருகே உள்ள விவசாய நிலங்கள், கிராம பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது. பின்னர் அது அருகே வட்டக்காடு பகுதியில் உள்ள கிராமத்துக்குள் புகுந்தது. உடனே தெருநாய்கள் யானையை பார்த்து குரைத்தது. சத்தம் கேட்டு வீடுகளில் இருந்த பொதுமக்கள் வெளியே வந்தனர். யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானையை சத்தம் போட்டு வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது. இதனால் வட்டக்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் சுற்றி திரிந்தது.


Next Story