வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி


வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2022 2:59 PM GMT (Updated: 17 Aug 2022 4:45 PM GMT)

விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிாிழந்தாா்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வ சிகாமணி மகன் மகேஸ்வரன்(வயது 39). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மகேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு புறப்பட்டார். விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையை கடந்து சென்றபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று திடீரென மகேஸ்வரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story