நாகையில், வேலைவாய்ப்பு முகாம்


நாகையில், வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 16 Sep 2023 7:15 PM GMT (Updated: 16 Sep 2023 7:16 PM GMT)

நாகையில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகையில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.

8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் கலை, அறிவியல், வணிக பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்கள், தையல்கலை பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

முன்னணி நிறுவனங்கள்

முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள நாகை மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வி தகுதி குறித்த விவரங்களை முன்னரே பதிவு செய்து கொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை அசல்-நகல் மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்றுடன் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story