நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
x

ஓசூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

ஓசூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாலூர் முதல் ஓசூர் வழியாக அதியமான் கோட்டை சாலையில் அசோக் பில்லர் முதல் குடிசாதன பள்ளி கூட்ரோடு வரை இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் மு.பன்னீர்செல்வம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது சாலை பணிகளை பார்வையிட்டும் அதன் தரத்தையும் அளவுகளையும் பார்வையிட்டார். அப்போது சாலை பணிகளை சரியான அளவுகளுடன் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story