லைவ் அப்டேட்ஸ் ஈரோடு இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி உறுதியானது ...!


லைவ் அப்டேட்ஸ் ஈரோடு  இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி உறுதியானது ...!
x
தினத்தந்தி 2 March 2023 2:31 AM GMT (Updated: 2 March 2023 1:25 PM GMT)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். 15-வது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் முடிவுகள் கிராபிக்ஸ் முழுவிவரம்

Live Updates

  • 2 March 2023 1:25 PM GMT

    இடைத்தேர்தல்: 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி...!

    ஈரோடு,

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார்.

    15-வது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரிய வெற்றியை ஈரோடு மக்கள் தந்திருக்கிறார்கள். என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன். இந்த வெற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.

  • 2 March 2023 12:39 PM GMT

    காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி உறுதியானது

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார்.15-வது சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

  • 2 March 2023 12:14 PM GMT

    1 லட்சம் வாக்குகளை தாண்டினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான 1,70,192 வாக்குகளில் 1,04,907 வாக்குகளை பெற்று 14வது சுற்றின் முடிவில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,666 வாக்குகள் பெற்று பின்னடைவு.

  • 2 March 2023 11:38 AM GMT

    அதிமுகவை விட 55,534 வாக்குகள் வித்தியாசத்தி ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை...!

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 12வது சுற்றிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

    காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவு. அதிமுகவை விட 55,534 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

  • 2 March 2023 10:45 AM GMT

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. 11-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 83,528 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

    11-வது சுற்று முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 51,168 வாக்குகள் முன்னிலையில் காங்கிரசின் வெற்றி உறுதியாகி உள்ளது.

  • 2 March 2023 10:28 AM GMT

    11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சர்வர் சரி செய்யப்பட்டதை அடுத்து 8 சுற்றுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

  • 2 March 2023 10:22 AM GMT

    வாக்கு மையத்தில் கூடுதல் கணினிகள் - கிருஷ்ணன் உன்னி

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தாமதத்தை ஈடுசெய்ய கூடுதல் கணினிகள் அமைத்து சுற்று விவரங்களை விரைந்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்தற்கு கூடுதல் கணினிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. எண்ணிக்கை துரிதப்படுத்தப்பட்டு முடிவுகள் மிக வேகமாக அறிவிக்கப்படும். இணைய சேவை பாதிப்பால் அதிகாரப்பூர்வ முடிவுகளை பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி கூறியுள்ளார்.

  • 2 March 2023 10:03 AM GMT

    மறைந்த தனது மகன் திருமகன் ஈ.வெ.ரா-வை விட அதிக வாக்குகள் பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

    9-வது சுற்றின் முடிவிலேயே 76,834 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மறைந்த திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

    தனது சொந்த வார்டான சொக்காய் தோட்டத்தில் 192 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு. திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 463 வாக்குகள் பெற்றுள்ளார்!

  • 2 March 2023 9:52 AM GMT

    28 ஆயிரம் வாக்குகளை கடந்து அதிமுக டெபாசிட்டை தக்க வைத்து கொண்டது...!

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் பெற்றார். இதுவரை 10 சுற்று முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் டெபாசிட்டை உறுதி செய்தார். 28 ஆயிரம் வாக்குகளை கடந்து அதிமுக டெபாசிட்டை தக்க வைத்து கொண்டது. ஒரு வேட்பாளர் டெபாசிட்டை பெற, பதிவான வாக்கில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெற்றிருக்க வேண்டும்.

  • 2 March 2023 9:42 AM GMT

    11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம்

    7-வது சுற்று முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 5 சுற்றுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story