முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம்


முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம்
x
தினத்தந்தி 27 Sep 2022 6:29 PM GMT (Updated: 27 Sep 2022 6:30 PM GMT)

முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சூசைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக புனித ஆலய பங்கு குரு ஜோமினிக் சாவியோ, முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் காசிமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முப்படையில் உள்ள ஓய்வு பெற்ற, குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவரையும் உறுப்பினராக சேர்ப்பது. சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், அரியலூரில் அமைந்துள்ள முன்னாள் முப்படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பெறக்கூடிய பலன்கள், ஆண்டு நிலுவை சந்தா தொகை வசூலித்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் சின்னப்பராஜ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மரியதனராஜ் நன்றி கூறினார்.


Next Story