அகழாய்வில் வீட்டின் மேற்பகுதி கண்டுபிடிப்பு


அகழாய்வில் வீட்டின் மேற்பகுதி கண்டுபிடிப்பு
x

சிவகாசி அருகே அகழாய்வில் வீட்டின் மேற் பகுதி கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

சிவகாசி அருகே அகழாய்வில் வீட்டின் மேற் பகுதி கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

அகழாய்வு பணி

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று 12-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டது. குழியில் 5 அடி ஆழம் தோண்டிய போது வீட்டின் மேற்பகுதி கட்டிடம் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி கலவையின் மூலம் கட்டப்பட்ட வீட்டின் மேற்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் சுவர் பகுதி வலுவாக இருப்பதை பார்க்க முடிகிறது. வீடு கட்ட பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் சேதமடையாமல் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய மண்பானைகள்

இதனால் கட்டிடத்தின் அருகிலேயே கூடுதலாக அகழாய்வு குழிகள் தோண்டுவதற்கு தயார் நிலையில் தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் சுண்ணாம்பு, கடுக்காய், கலவைகள் நிரப்பப்பட்ட பெரிய மண்பானைகள் மற்றும் அழகிய வேலைப்பாடுடன் தயார் செய்யப்பட்ட மண் குடங்கள், வட்ட சில்லுகள், தாயக்கட்டைகள், 2-வது முறையாக சூது பவளம் ஆகியவை கிடைத்துள்ளது.

10-வது அகழாய்வு குழியில் 5-க்கும் மேற்பட்ட சிறிய மண் குடங்கள், சங்கு வளையல்கள், வீட்டின் உள்பகுதியில் தரையை சமப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட கற்கள், கண்ணாடி பாசிமணிகள், விலங்கின் எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.


Next Story