கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவிலில் வினோத நடனம்


கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவிலில் வினோத நடனம்
x

வாலாஜாவில் மராட்டிய மன்னர் சிவாஜி வழிபட்ட கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவிலில் தசரா விழாவையொட்டி வினோத நடனம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

மராட்டிய மன்னர்

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் பழைய தேரடி அருகில் மராட்டிய மன்னர் சிவாஜி வழிபட்டு சென்ற கண்டோபா சுவாமி மல்லேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு அபூர்வமான கோவில் ஆகும். இந்த கோவில் திருவிழா வினோதமாகவே நடைபெறும்.

இந்த கோவிலின் கருவறையில் கண்டோபா குதிரையின் மேல் அம்பாள்பவனியுடன் காட்சியளிக்க மல்லசூரன் என்ற அசுரன் நாய் உருவில் அவரை வழிபடும் பஞ்சலோக சிலையை கல் வடிவில் தரிசிக்கலாம்.

வினோத நடனம்

இந்த நிலையில், தசரா பண்டிகையையொட்டி வீதி உலா நடைபெற்றது. அசுரன் மல்லசூரன் வழி வந்தவர்கள் கருப்பு கம்பளி ஆடை அணிந்து கரடி முடியினால் ஆன தலைமுடி அணிந்து கையில் உடுக்கைகளுடன் கண்டோபா சாமியின் மீது புகழினை பாடிக்கொண்டே இடையிடையே நாய் போல குறைத்துக் கொண்டு உக்கிர தாண்டவம் ஆடினர்.

தசரா பண்டிகையின் இரண்டாவது நாளில் கோவில் கர்ப்ப கிரகத்தில் மணல் பரப்பி நவதானியங்களை விதைத்து இதன் நடுவே கலசம் வைத்து பூஜை செய்தனர். விஜயதசமி அன்று வழிபடும் பக்தர்கள் கர்ப்ப கிரகத்தில் உள்ள கண்டோபா சாமியினை வாலாஜாவின் பிரதான தெருகளில் எடுத்து சென்று திருவீதி உலா நடந்தினர்.

சத்ரபதி சிவாஜி சென்னையில் இருந்து வரும்போது வழியில் இந்த வாலாஜா கண்டோபா புல்லாங்குழல் வைத்து தொடர்ந்து மூச்சு விடாமல் தம் பிடித்து ஊதிய நிலையில் ஆடினர். அதன்படி கையில் உருட்டு கட்டை வைத்துக் கொண்டு வேகமாக தொடர்ந்து சுழற்சி சத்தம் செய்தனர். இவர்களின் வித்தியாசமான ஆட்டமும், நடனமும் பார்ப்போரை பயமுறுத்துவதாகவே இருந்தது. முடிவில் பக்தர்களுக்கு மஞ்சள் பிரசாதம் வழங்கி ஆசி வழங்கப்பட்டது.


Next Story