கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு


கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
x

கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் 27-ந் தேதி கல்லணையை வந்ததடைந்தது. அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கல்லணை கால்வாயில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகள் முடிவடையாததால் கல்லணை கால்வாயில் இருந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்தநிலையில், காவிரி மற்றும் வெண்ணாற்றில் நேற்று குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் 3,305 கன அடியும், வெண்ணாற்றில் 3,006 கனஅடியும், கொள்ளிடத்தில் 713 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி கொண்டுள்ளது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், திருக்காட்டுப்பள்ளி காவிரி குடமுருட்டி தலைப்பிலிருந்து காவிரியில் 2,656 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குடமுருட்டி ஆற்றின் திருக்காட்டுப்பள்ளி தலைப்பில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அனைத்து இடங்களிலும் பராமரிப்பு பணிகள் முடிந்து முழு அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே விரைவாக கடைமடைக்கு தண்ணீர் சென்று அடையும். அதன் பின்னர் கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாய பணிகள் மும்முரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story