கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x

கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூரை சேர்ந்த விவசாயி குமார் (வயது 53). இவருக்கு திருமணமாகி நளினி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருக்கும்போது மின்விசிறியில் துப்பட்டா கொண்டு குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த கவரைப்போட்டை போலீசார் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விவசாயி குமார் குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 35). இவர் தனது வயலில் உள்ள மல்லிகை செடிக்கு நேற்று முன் தினம் காலை பூச்சி மருந்து அடித்துள்ளார். அப்போது அதன் நெடி தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அவர் மயங்கி விழுந்தார். எனவே, அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று முன் தினம் இரவு தனலட்சுமி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தனலட்சுமியின் கணவர் விநாயகமூர்த்தி நேற்று வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story