கிருஷ்ணகிரி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி
கிருஷ்ணகிரி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி இறந்தார். உடன் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி இறந்தார். உடன் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
விவசாயி சாவு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மத்தேரியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). பாலக்கோடு அடுத்த கதிரம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (47). விவசாயிகள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் பூவத்தி அருகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் நிலைதடுமாறி முனியப்பனும், பரமசிவமும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முனியப்பன் படுகாயம் அடைந்தார்.
தீவிர சிகிச்சை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த முனியப்பனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.