தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி விவசாயி பலி


தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி விவசாயி பலி
x

பாலக்கோடு அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி விவசாயி பலியானார்.

தர்மபுரி

தர்மபுரி:

பாலக்கோடு அருகே உள்ள சங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 32). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு சங்கம்பட்டி பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தண்டவாளத்தை கடந்த போது செல்போனில் பேசியபடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story