மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
x

குளித்தலை அருகே டீக்குடிக்க சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். தப்பியோடி வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த வர் பழனி (வயது 70). விவசாயி. இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் குளித்தலை- மணப்பாறை நெடுஞ்சாலை குப்பாச்சிப்பட்டி கடை வீதியில் டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்.பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்கு நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக பணிக்கம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகன் மர்பிதன் (29) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பழனி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து மர்பிதன் மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பழனி மகன் பெரியசாமி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story