தோட்டக்கலை திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்


தோட்டக்கலை திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்
x

தோட்டக்கலை திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2023-24-ம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய மூங்கில் இயக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை துறையின் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மானியங்கள் பெற இயலும். அவ்வாறு பதிவு செய்ய இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து பயனடையலாம்.Farmers are requested to register to benefit from horticulture schemes


Next Story