கழுகுமலையில் விவசாயிகள் சங்க கூட்டம்


கழுகுமலையில் விவசாயிகள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாலுகா குழு தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எம்.ஏ. ராஜேந்திரன், சங்க தாலுகா செயலாளர் லெனின்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சரி வர மழை பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பெருமாள்பட்டி பஞ்சாயத்து தலைவர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் ராமலிங்கம், லட்சுமணன், முருகன், எட்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விவசாயிகள் தாலுகா குழு தலைவர் சிவராமன் செய்திருந்தார்.


Next Story