விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த மாதத்திற்கான (செப்டம்பர்) குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். மேலும், கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story