வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:46 PM GMT)

செய்யாறு பகுதிகளில் காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்காத விவசாயிகள். வேளாண்துறை அதிகாரிகளை கண்டித்து ஓட்டை, உடைசல் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு பகுதிகளில் காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்காத விவசாயிகள். வேளாண்துறை அதிகாரிகளை கண்டித்து ஓட்டை, உடைசல் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காப்பீடு

செய்யாறு சுற்று வட்டார விவசாயிகள் நெல் சம்பா பருவத்திற்கு கடந்த 2021-ல் தங்கள் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரத்து 58 வீதம் காப்பீடு செய்திருந்தனர். அதன்படி தற்போது செய்யாறு பகுதிகளில் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது

ஆனால் பலருக்கு கிடைக்கவில்லை. வேளாண்மை அதிகாரிகளின் தவறான புள்ளி விவரத்தால் தான் இந்த தவறு நே4ர்ந்ததாக இழப்பீடு கிடைக்காத விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனிடையே காப்பீடு நிவாரணம் கிடைக்காத விவசாயிகளிடம் நவம்பர் 2,3,4 தேதிகளில் மனு பெற வேளாண்மை உதவி இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த விவரங்களை விவசாயிகளிடம் வேளாண்மை துறை அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை.இந்த நிலையில் 2021-ல் சம்பா சாகுபடி பயிர் அறுவடை சோதனை எந்த சர்வே எண்ணில் யாருடைய பட்டா நிலத்தில் எப்போது யார் முன்னிலையில் யார் யாரால் கணக்கிடப்பட்டது என்கிற வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், வேளாண்மை அதிகாரிகள் தவறான புள்ளி விவரத்தால் விவசாயிகளுக்கு 2021 இல் சம்பா பருவம் ஒன்றில் காப்பீடு நிவாரணம் கிடைக்கவில்லை.

ஓட்டை, உடைசல் சைக்கிள்

ஆனால் தமிழக அரசு 2021 இல் சம்பா வெள்ளை நிவாரண நிதி ஏக்கருக்கு ரூ.8 அயிரம் வழங்கியது. எனவே மாவட்ட நிர்வாகம் பயிர் அறுவடை சோதனை முடிவுகளை வெளியிட வேண்டி ஓட்டை உடைசலான சைக்கிள்களில் ஊர்வலமாக செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் வந்தனர்.

அங்கு அவர்கள் கார்த்திகை தீபத்துக்குள்ளாவது நிவாரணம் கிடைக்குமா என கேட்டு அகல் விளக்கேற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது இந்த நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story