முக்கொம்பு மேலணையில் காவிரி தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்


முக்கொம்பு மேலணையில் காவிரி தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
x

விவசாயிகள் Farmers

திருச்சி

ஜீயபுரம், மே.28-

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், வழியாக திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றுப்பகுதிக்கு நேற்று காலை7.40 மணி அளவில் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை வழியாக முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து அங்கு ஒன்றுகூடிய திருச்சி மாவட்ட விவசாய சங்க செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பூக்கள், நெல்மணிகள் தூவி கற்பூரம் ஏற்றி வரவேற்றனர். மேலும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் ஜீயபுரம், கம்பரசம்பேட்டை தடுப்பணை வழியாக கல்லணை நோக்கி தண்ணீர் சென்றது. நேற்று மாலை நிலவரப்படி 3 ஆயிரத்து 112 கனஅடி தண்ணீர் முக்கொம்பு அணையில் இருந்து வெளியேறியது.


Next Story