பெண் வருவாய் ஆய்வாளர் சிறையில் அடைப்பு


பெண் வருவாய் ஆய்வாளர் சிறையில் அடைப்பு
x

பெண் வருவாய் ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் பிர்கா வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் இந்திராணி(வயது 40). இந்நிலையில் அய்யலூர் குடிக்காட்டை சேர்ந்த முருகானந்தத்தின் மனைவி முத்தரசி, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த வருவாய் ஆய்வாளர் இந்திராணி, பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து முத்தரசி பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது வருவாய் ஆய்வாளர் இந்திராணியை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்திராணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்திராணியை, பணியிடை நீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story