பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை அருகே சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
தக்கலை,
தக்கலை அருகே சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
கொரோனாவால் வருமானம் இழப்பு
தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை குளக்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது33), கார் டிரைவர். இவருடைய மனைவி கற்பகம் (32). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
மணிகண்டன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி சொந்தமாக ஒரு கார் வாங்கினார். ெதாடர்ந்து கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சரியாக ஓட்டம் இல்லாததால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் காரை விற்று கடனை அடைக்க முயன்றார். ஆனால் அந்த பணத்திலும் கடன் தீரவில்லை. இதனால் மனைவி கற்பகம் பெயரில் சுய உதவிக்குழுவில் கடன் எடுத்தார். இந்த கடன் தொகையை திரும்ப செலுத்த மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுய உதவி குழுவில் கொடுப்பதற்கு கற்பகம் கணவரிடம் பணம் கேட்டார். அவர் 'பணம் இல்லை' என்றதால் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இதனால் மனமுடைந்த கற்பகம் வீட்டில் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து கற்பகத்தை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிதாப சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி கற்பகம் இரவு 11 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.