பிலிக்கல்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம்


பிலிக்கல்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம்
x

பிலிக்கல்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் நடந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையம் அருகே அ.குன்னத்தூரில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்தநிலையில் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று சாமி சிலைகளை வேறு இடத்தில் வைப்பதற்காக பாலாலயம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது. இதில் அ.குன்னத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story