புனித அந்தோணியார் ஆலய திருவிழா
புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா அறநூற்றிவயல் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை ஆண்டாவூரணி பங்குத்தந்தை ஞானதாசன், உதவி பங்கு தந்தை ஜோஸ்வா ஆகியோர் நிறைவேற்றினர். தொடர்ந்து மறையுறை நிகழ்த்தப்பட்டது. பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித அந்தோணியார் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பவனியாக சென்று இறை மக்களுக்கு இறையாசீர் வழங்கினார். இதனையொட்டி அன்னதானம், வாணவேடிக்கை நடைபெற்றது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநூற்றிவயல் கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story