பண்டிகை கால விடுமுறை காரணமாக சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்வு


பண்டிகை கால விடுமுறை காரணமாக சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்வு
x

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையை ஒட்டி சென்னையில் விமான சேவை மற்றும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு அதிகம் செல்லக்கூடும் நிலையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூல் செய்யப்படுகிறது. மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


Next Story