தாய்-மகள் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு பா.ஜனதா சார்பில் நிதி உதவி - எச்.ராஜா வழங்கினார்


தாய்-மகள் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு பா.ஜனதா சார்பில் நிதி உதவி - எச்.ராஜா வழங்கினார்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:23+05:30)

தாய்-மகள் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு பா.ஜனதா சார்பில் நிதி உதவியை எச்.ராஜா வழங்கினார்

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய் மகளை கொலை செய்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் அந்த குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா கண்ணங்கோட்டைக்குச் சென்று கொலை செய்யப்பட்ட கனகத்தின் மகன் பாலசுப்பிரமணியணிடம் ஆறுதல் கூறினாா். மேலும் அவரிடம் கட்சியின் சார்பில் 1 லட்ச ரூபாய் நிதியை எச்.ராஜா வழங்கினார். அப்போது அவருடன் சிவகங்கை மாவட்ட செயலாளர் மேப்பல் சக்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் இறகுசேரி காசிராஜா, மாவட்ட பொதுகுழு உறுப்பினர் கண்ணங்கோட்டை ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனா்.


Next Story