தீ விபத்தில் கடைகள் சேதம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்


தீ விபத்தில் கடைகள் சேதம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்
x

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சர்வீஸ் ரோட்டில் கிருஷ்ணசாமி, கோமதி ஆகியோருக்கு சொந்தமான சலூன் கடைகள் மற்றும் குருசாமி என்பவருக்குச் சொந்தமான டீக்கடை நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து சேதமடைந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், 3 மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன.

நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்தியா, அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடன் சென்றனர்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மந்தித்தோப்பு ரோடு பாலாஜி நகரில் ரூ.9.20 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை மற்றும் காமராஜர் நகர், தெற்குத் தெருவில் ரூ.9.92 லட்சம் செலவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேவர் பிளாக் சாலைப்பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை கவுன்சிலர் கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story