கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை - போலீசார் பேச்சுவார்தை


கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை - போலீசார் பேச்சுவார்தை
x
Dailythanthi 27 July 2022 3:26 PM IST
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்வது, அதற்கு துணை போகும் படகுகளின் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் சில படகுகள் மற்றும் வலைகளை மீன்வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்துள்ளனர். இதில் சில படகுகள் மற்றும் வலைகள் விடுவிக்கப்பட்டதாக சுருக்குமடி வலைக்கு எதிராக செயல்படும் மீனவர்களின் தரப்பினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர்கள், நேற்று இரவு கடலூர் துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுருக்கு மடி வலை பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தகவல் அறிந்த முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை கலைந்து போக செய்தனர்.


Next Story