ஓமனில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்


ஓமனில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்
x

ஓமனில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 8 பேரை உடனடியாக மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

ஓமன் நாட்டின் மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களின் அவலநிலையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். அந்த மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை வழங்கப்படாததாலும் அவர்களால் தாயகம் திரும்ப முடியவில்லை.

விரைவுபடுத்த வேண்டும்

13.3.2022 அன்று அவர்கள் ஓமனுக்குச் சென்றனர். அவர்களின் பாஸ்போர்ட் எண்களையும் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். எனவே அவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story