தோகைமலை அருகே நாயக்காகுளத்தில் மீன்பிடி திருவிழா


தோகைமலை அருகே நாயக்காகுளத்தில் மீன்பிடி திருவிழா
x

தோகைமலை அருகே நாயக்காகுளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாக்காகுளத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் குளம் நிரம்பாமல் இருந்து வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக போதிய மலை பெய்து வருவதால் தோகமலைக்கு உட்பட்ட ஊராட்சியில் உள்ள அனைத்து ஏரிகளும் குளங்களும் நிறைந்து வழிந்தது. இதில் தோகைமலை நாக்காகுளம் நிறைந்து.

இந்த நிலையில் நாக்காகுளத்தில் நீர் வற்றி தொடங்கியதால் ஊர்பொதுமக்கள் மீன்பிடி திருவிழா நடத்தி முடிவு செய்தனர். அதன்படி இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழா ஊர் நாட்டாமை குளத்தின் கரையில் வெள்ளைத் துண்டு வீசி விழாவை தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் குளத்துக்குள் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினார்கள். அவர்கள் தூரி,கச்சா, கொசுவலை போன்றவை உதவிகளுடன் மீன்களை பிடித்தனர்.இதில் பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story