ஆனித்திருவிழா கொடியேற்றம்


ஆனித்திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 17 Jun 2023 7:30 PM GMT (Updated: 17 Jun 2023 7:31 PM GMT)

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆனித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி சீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 10.30 மணியளவில் கொடி மரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இந்த ஆனித்திருவிழா வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி நாகல்நகர் புறப்பாடும், 23-ந்தேதி திருக்கல்யாணம், 25-ந்தேதி திருத்தேரோட்டம், 27-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 28-ந்தேதி நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது.


Related Tags :
Next Story