கீழடி அகழாய்வில் சுடுமண் உருவம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு


கீழடி அகழாய்வில் சுடுமண் உருவம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
x

image tweeted by @TThenarasu

கீழடி அகழாய்வில் சுடுமண் உருவம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கீழடி அகழாய்வில் சுடுமண் உருவம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;

கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் XM19/3 என்ற அகழாய்வுக் குழியில் 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப் பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. கைகளால் செய்யப்பட்ட இச்சுடுமண் உருவத்தில், பாம்பின் கண்களும் வாய் பகுதியும் மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது.

மேலும் இச்சுடுமண் உருவமானது சொரசொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. மேலும் இச்சுடுமண் உருவம் 6.5 செ.மீ நீளம் 5.4 செ.மீ அகலம் 1.5 செ.மீ தடிமன் கொண்டுள்ளது. இந்த சுடுமண் உருவத்துடன் சுடுமண்ணால் செய்யப்பட்ட பந்து, வட்டச்சில்லுகள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணி மற்றும் கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சு பெற்ற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story