தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்வு பிச்சி கிலோ ரூ.1,400-க்கு விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி  பூக்கள் விலை உயர்வு  பிச்சி கிலோ ரூ.1,400-க்கு விற்பனை
x
தினத்தந்தி 23 Oct 2022 6:45 PM GMT (Updated: 23 Oct 2022 6:46 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விலை நேற்று உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தோவாளை பூ மார்க்கெட்

குமரி மாவட்டம் தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். பூக்களின் விலை ஏறி இறங்கும் தன்மையுடையது. பண்டிகை, திருவிழா, முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும். அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயர்ந்து இருந்தது.

பிச்சி ரூ.1,400-க்கு விற்பனை

நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ1,100-க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று ரூ.1,400 ஆக உயர்ந்தது.

மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

அரளி ரூ.250, மல்லிகை ரூ.900, முல்லை ரூ.1,300 சம்பங்கி ரூ.100, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.50, துளசி ரூ.30, தாமரை ஒன்று ரூ.15, கோழிப்பூ ரூ.40, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஜா பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஜா ரூ.180, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.60, சிவப்புகேந்தி ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.120, வெள்ளை சிவந்தி ரூ.200, கொழுந்து ரூ.110, மருக்கொழுந்து ரூ.120 என விற்பனை ஆனது. ஆனாலும் வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.


Next Story