ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு:மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம்


ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு:மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது.

தேனி

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, கதிர்நரசிங்கபுரம், கொத்தபட்டி, ராஜதானி ஆகிய இடங்களில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மல்லிகைப்பூ ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ விளைச்சல் அடியோடு சரிந்துள்ளது.

இந்நிலையில் மகா சிவராத்திரியையொட்டி மல்லிகைப்பூக்களின் தேவை அதிகரித்தது. மேலும் வரத்தும் குறைவாக இருந்ததால் நேற்று மல்லிகைப்பூவின் விலை கிடுகிடு வென உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500-க்கு ஏலம் போனது. இந்நிலையில் மகாசிவராத்திரியையொட்டி நேற்று காலை மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை ஏலம் போனது. வரத்து குறைவாக இருந்ததால் மல்லிகைப்பூவை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதேபோல், பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி, சம்பங்கி, ரோஜா, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களும் அதிக விலைக்கு விற்பனையானது.


Related Tags :
Next Story